/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சியை கண்டித்து கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு
/
மாநகராட்சியை கண்டித்து கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு
மாநகராட்சியை கண்டித்து கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு
மாநகராட்சியை கண்டித்து கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு
ADDED : மே 24, 2025 11:22 PM
பெருமாநல்லூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் பொங்கு பாளையம் ஊராட்சி, காளம் பாளையம் பகுதியில் உள்ள பாறைக் குழியில் கொட்டப்பட்டு வருகிறது.
மருந்து தெளித்தல் உள்ளிட்ட போதிய பராமரிப்பு இல்லாததால், துர் நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை என கூறி கட்சியினர் மற்றும் அப்பகுதி பொது மக்களும், அவ்வப்போது, குப்பை கொட்ட வரும் லாரியை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் துர்நாற்றம் வீசாத வகையில் மருந்து தெளித்து, மண் போட்டு உரிய பராமரிப்பு மேற்கொள்ளப்படும். பராமரிப்பு மேற்கொண்ட பிறகு குப்பை கொட்டப்படும் என்று உறுதியளித்தனர். போதிய பராமரிப்பு மேற்கொண்டபின் குப்பை கொட்டப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மா.கம்யூ கட்சியினர், போதிய பராமரிப்பு இல்லை. சுகாதார கேடு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படும். என குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, நேற்று பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளம் பாளையம், பள்ளி பாளையம் உள்ளிட்ட பகுதி வீடுகளில் பொது மக்கள் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து, நாளை (26ம் தேதி) காலை குப்பை கொட்ட வரும் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.