/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மயானத்திற்கு நிலம் ஒதுக்க கோரி மறியல்
/
மயானத்திற்கு நிலம் ஒதுக்க கோரி மறியல்
ADDED : ஜூலை 18, 2025 09:27 PM
உடுமலை; உடுமலை, எரிசனம்பட்டியில், ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் இறந்தால், சடலத்தை தனியார், நிலத்தில் புதைத்து வந்தனர். நேற்று அதே பகுதியை சேர்ந்தவர் இறந்த நிலையில், நிரந்தரமாக மயானத்திற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும், என கோரி பொதுமக்கள் திடீர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் கவுரி சங்கர் மற்றும் போலீசார், பி.டி.ஓ., ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு புறம்போக்கு நிலம் கண்டறியப்பட்டு, ஒதுக்கீடு செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், உடுமலை- ஆனைமலை ரோட்டில், 7 மணி முதல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.