/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்கு நகரில் எங்கும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்
/
கொங்கு நகரில் எங்கும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்
கொங்கு நகரில் எங்கும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்
கொங்கு நகரில் எங்கும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்
ADDED : செப் 25, 2025 12:21 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், அதிகரித்துள்ள நாய்களால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர், கொங்கு நகர் மெயின் ரோடு, எம்.எஸ்.நகர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
எம்.எஸ்.நகர் பகுதியில், தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் என்று யாரையும் விடுவதில்லை. எல்லோரையும் கடிக்கிறது. எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் பலர் வழக்கமாக ரத்த தானம் செய்பவர்கள். நாய் கடித்ததால் இனி ஒரு ஆண்டு ரத்த தானம் செய்ய முடியாது. இந்த வாரத்தில் மட்டும் 25க்கும் மேலானோர் எங்கள் தெருவில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் தெருநாய் பிரச்னைக்கு குரல் கொடுத்தால், எங்கள்மீது குறை சொல்வதற்கு ஒரு கூட்டம் வருகிறது. நாய்கள் பிரச்னை குறித்து சுட்டிக்காட்டினால், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் எங்கள் மீது குற்றம் கூறி எங்களை தாக்க வருகின்றனர். போலீசில் புகார் கொடுக்கின்றனர். தெருநாய்களுக்கு எதிராக செயல்பட்டால் மிரட்டுகின்றனர். நாய்க் கடிக்கு தடுப்பூசி போட்டால் சரியாகிவிடும் என்கின்றனர். குழந்தை கடிப்பது போல நினைத்துக்கொள்ளுங்கள் என்று குழந்தையுடன் ஒப்பிடுகின்றனர்.
மாநகராட்சி 'அசட்டை' மாநகராட்சி மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகாரளித்தோம். ஒருநாள் கூட இது பற்றி விழிப்புணர்வும் கொடுக்கவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளுக்கு நாள் தெருநாய்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எங்கள் பகுதியில், குறைந்தது, 25 தெருநாய்கள் இருக்கின்றன. இதுவரை ஒரு நாய் மட்டுமே பிடிக்கப்பட்டது. தினமும், 10 பேரையாவது தெருநாய் கடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ரேபிஸ் வைரஸ் தாக்கி விடுமோ என்று பயமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.