/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிதிலமடைந்த கான்கிரீட் ரோடு: பொதுமக்கள் புகார்
/
சிதிலமடைந்த கான்கிரீட் ரோடு: பொதுமக்கள் புகார்
ADDED : நவ 09, 2025 11:07 PM

உடுமலை: உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சியில், தரமற்ற பணி காரணமாக, கான்கிரீட் ரோடு சிதிலமடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உடுமலை ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி பி.வி.,லே-அவுட் பகுதியில், 10 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது.
இந்த ரோடு திட்டப்படி, அமைக்கப்படாமல், தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், கான்கிரீட் ரோடு பெயர்ந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளது. ரோடு முழுவதும் சேதமடைந்து, ரோட்டில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது.
எனவே, இந்த கான்கிரீட் ரோட்டை ஆய்வு செய்து, தரமான முறையில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.

