/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உலக அமைதி பேரணி: மாணவர்கள் பங்கேற்பு
/
உலக அமைதி பேரணி: மாணவர்கள் பங்கேற்பு
ADDED : நவ 09, 2025 11:09 PM

உடுமலை: உடுமலையில், உலக சமாதான ஆலயம் சார்பில், உலக அமைதி பேரணி நடந்தது.
கடந்த 1918 ஆம் ஆண்டு, முதலாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், நவம்பர் 11 ஆம் தேதி உலக அமைதி தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக சமாதான ஆலயம், ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லுாரி சார்பில், நேற்று காலை 7:00 மணிக்கு, உடுமலை கல்பனா மைதானத்தில், உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தலைவர் மணி தலைமை வகித்தார். விவேகானந்தா பள்ளி தாளாளர் மூர்த்தி துவக்கி வைத்தனர். புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், பேருந்து நிலையம் தளி ரோடு வழியாக குட்டை திடலில் நிறைவு பெற்றது.
இதில் உலக சமாதான ஆலயம் மெய் உணர்வாளர்கள், ஸ்ரீ பரஞ்ஜோதி யோக கல்லூரி மாணவர்கள் மற்றும் உடுமலை நியூ ராயல்ஸ் லயன்ஸ் கிளப், பொதுமக்கள் ஊர்வல பேரணியில் கலந்து கொண்டனர்.

