/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நால் ரோட்டில் ரவுண்டானா பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
நால் ரோட்டில் ரவுண்டானா பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நால் ரோட்டில் ரவுண்டானா பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நால் ரோட்டில் ரவுண்டானா பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 31, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: மடத்துக்குளம் நால் ரோட்டில் போக்குவரத்த நெரிசலை தவிர்க்க ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள மடத்துக்குளம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அங்கு நால்ரோட்டில் கணியூர் ரோடு, குமரலிங்கம் ரோடும் சந்திக்கின்றன.
இங்கு அதிகளவில் போக்குவரத்து இருந்து வருகிறது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நெரிசலை தவிர்க்கும் வகையில், மடத்துக்குளம் நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.