/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுக்கழிப்பிடம் திறப்பு பொதுமக்கள் நிம்மதி
/
பொதுக்கழிப்பிடம் திறப்பு பொதுமக்கள் நிம்மதி
ADDED : செப் 20, 2025 08:00 AM
திருப்பூர்; மணியகாரம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, 46வது வார்டுக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் ஏ.டி. காலனியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய பொதுக்கழிப்பிடம் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று புதிய கழிப்பிடம் கட்ட திட்டமிடப்பட்டது. கட்டுமானப் பணி மிகவும் மந்தகதியில் நடந்தது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மக்களின் பிரச்னை குறித்த செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இதையறிந்த அதிகாரிகள் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தினர்; பணிகள் நிறைவு பெற்றது. தற்போது, கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.