/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்சிப்பொருளாக பொது கழிப்பிடம்
/
காட்சிப்பொருளாக பொது கழிப்பிடம்
ADDED : ஆக 25, 2025 12:41 AM

பெருமாநல்லுார்; பெருமாநல்லுார் ஊராட்சி, பொடாரம்பாளையம் ஆதி திராவிடர் காலனியில் அப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக தொகுதி எம்.பி., உள்ளுர் வளர்ச்சி திட்ட நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. கடந்த கிராமசபை கூட்டத்தின்போது, மக்களின் நலன் கருதி உடனடியாக கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொடாரம்பாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 'பைப் லைன் வேலை உள்ளது. அதை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,' என ஊராட்சி நிர்வாகத்தினர் உறுதி கூறி உள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர், கழிப்பிடத்தை இன்றுவரை சரி செய்யாமல் மெத்தன போக்கில் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிப்பிடம் இல்லாததால், திறந்தவெளியை பொதுமக்கள் நாடுகின்றனர். மக்கள் பயன்பாட்டுக்கு கழிப்பிடத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும்.