/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துவக்க நிலை வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவக்கம்
/
துவக்க நிலை வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவக்கம்
துவக்க நிலை வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவக்கம்
துவக்க நிலை வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவக்கம்
ADDED : செப் 17, 2025 09:18 PM

உடுமலை; உடுமலை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், துவக்க நிலை வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு துவங்கியது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு கடந்த 11ம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு கடந்த 15ம் தேதியும் காலாண்டு தேர்வுகள் துவங்கின.
இந்நிலையில், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் துவக்க நிலை வகுப்புக்களுக்கான காலாண்டு தேர்வு நேற்று முதல் துவங்கியது. ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதல் தேர்வு துவங்கியது. ஆசிரியர்கள் தேர்வுகளை கண்காணித்தனர். இறுதி தேர்வு செப்., 25ம்தேதி இறுதி தேர்வு நடக்கிறது. காலாண்டு தேர்வு விடுமுறை செப்., 26ம்தேதி முதல் துவங்குகிறது.