/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று வெறிநோய் தடுப்பூசி முகாம்
/
இன்று வெறிநோய் தடுப்பூசி முகாம்
ADDED : செப் 27, 2025 11:47 PM
திருப்பூர் : கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
அதில், கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது:
ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வாகனங்களில் அழைத்து செல்லும்போது, அவைகளுக்கு தீங்கு தராதவாறு அழைத்து செல்ல வேண்டும் என்றும், உரிமையாளர்கள் தெருவில் உலவும் கால்நடைகளை மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பராமரிக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு துறையின்கீழ் செயல்படும் அனைத்து மருத்துவ நிலையங்களிலும், 'அஸ்காட்' திட்டத்தின் கீழ் இலவச வெறி நோய் தடுப்பூசி போடவும் நாய்களை அடையாளம் கண்டு, அவற்றைப் பிடிப்பதற்கு மாநகராட்சி, நகராட்சி ஊராட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கலெக்டர் அறிவித்தபடி, இன்று, வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்பில் உள்ள அனைத்து மருத்துவ நிலையங்களிலும் இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.