/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் துவக்கம்
/
ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் துவக்கம்
ADDED : டிச 04, 2024 10:57 PM

திருப்பூர்; கடந்த, 2007ல், ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடந்தது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால், தேர்தல் நடக்காத நிலையில், நேற்று, நாடு முழுதும் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் துவங்கியது; வரும், 6ம் தேதி வரை தேர்தல் நடக்கிறது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட் வளாகம் அருகே, ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை, எஸ்.ஆர்.எம்.யு., (தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன்) - டி.ஆர்.இ.யு., (தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம்) - எஸ்.ஆர்.இ.எஸ்., டி.ஆர்.கே.எஸ்., - ஆர்.எம்.யூ., ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர்.
தங்கள் சங்கத்தினருக்கு ஓட்டளிக்க நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காலை 8:00 முதல் மாலை 6:00 வரை ஓட்டுப்பதிவு நடந்தது. அவர்களுக்கு தொழிற்சங்க உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். திருப்பூரில், 341 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள். பதிவாகும் ஓட்டுகள் எண்ணப்பட்டு, வரும், 12 ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெறும் தொழிற்சங்கம், மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க முடியும்; தேர்தலில், 30 சதவீத வாக்கு பெறும் சங்கத்துக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும்.