தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மழையால் ‘நீச்சல் குளம்’ அவிநாசியில் அவலம்

மழையால் ‘நீச்சல் குளம்’ அவிநாசியில் அவலம்

மழையால் ‘நீச்சல் குளம்’ அவிநாசியில் அவலம்


ADDED : நவ 05, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 07:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (நவ.,5) அதிகாலை முதல் பெய்த கனமழையால், நகராட்சியின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

குறிப்பாக, கச்சேரி வீதி, தாலுகா அலுவலகம் முன்பு, வடக்கு ரத வீதி, புதிய பேருந்து நிலையம், கைகாட்டிபுதுார், சூளை, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

சேவூர் சாலையில், சூளை – காமராஜர் நகர் இடையே ஒரு அடிக்கும் மேல் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் நிலவுகிறது. பல இடங்களில் சாக்கடை வடிகால்கள் இல்லாததும், பழுதடைந்த கால்வாய்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் வடிகால் வசதி பாதிக்கப்பட்டிருப்பதுமே இதற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடும் தொற்றுநோய் அபாயமும் ஏற்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை எனக் கூறும் மக்கள், பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும், மழைநீர் வடிகால் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் அமைச்சர் கமலியிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us