/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவ மழை வேண்டி மழைச்சோறு வழிபாடு
/
பருவ மழை வேண்டி மழைச்சோறு வழிபாடு
ADDED : செப் 29, 2025 12:23 AM

திருப்பூர்; பருவமழை, தவறாமல் பெய்ய வேண்டி, பாரப் பாளையத்தில், மழை சோறு பொங்கல் வைத்து மக்கள் வழிபட்டனர்.
பருவமழை பெய்யாத போது, சரியான காலத்தில் மழை பெய்ய வேண்டி, பொதுமக்கள் மழைச்சோறு வழிபாடு நடத்துவது வழக்கம்.
தென்மேற்கு பருவத்தில், முதல் மாதம் மட்டுமே மழை பெய்தது; இரண்டு மாதங்கள் மழை இல்லை; நான்காவது மாதத்தில் சில நாட்கள் மட்டும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இருப்பினும், சரியான மழைப்பொழிவு இல்லாமல், மானாவாரி பயிர் சாகுபடியை துவங்க இயலவில்லை.
இந்நிலையில், திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையம் கருப்பசாமி கோவில் காட்டில், பொதுமக்கள் மழை வழிபாடு நடத்தினர். மழை வேண்டி பொங்கல் வைத்து, பொதுவழிபாடு நடத்தி, கூட்டு பிரார்த்தனை செய்தனர். பா.ஜ., நிர்வாகி ரத்தினசாமி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.