/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை நீர் சேகரிப்பு மறந்து போச்சு: காட்சிப்பொருளாக கட்டமைப்பு
/
மழை நீர் சேகரிப்பு மறந்து போச்சு: காட்சிப்பொருளாக கட்டமைப்பு
மழை நீர் சேகரிப்பு மறந்து போச்சு: காட்சிப்பொருளாக கட்டமைப்பு
மழை நீர் சேகரிப்பு மறந்து போச்சு: காட்சிப்பொருளாக கட்டமைப்பு
ADDED : அக் 16, 2024 08:56 PM
உடுமலை : பருவமழை துவங்க உள்ள நிலையில், குடிமங்கலம் ஒன்றியத்தில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பரிதாப நிலையில் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்தில் நிலத்தடி நீர் மட்டத்துக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் ஆதாரமாக உள்ளன.
இந்த மழைக்காலத்தில், குளம் மற்றும் இதர கட்டமைப்புகள் வாயிலாக மழை நீரை சேகரித்தால், நிலத்தடி நீர்மட்டம் சரியாமல் பாதுகாக்கலாம். ஆனால், மழை நீர் சேகரிப்புக்கு தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை.
மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளில், தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு, மேற்கொள்வதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன், குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள, 400 அரசு கட்டடங்களிலும் மழை நீரை சேகரிக்க கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், சோதனை முயற்சியாக, கிராமங்களில், பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட போர்வெல்களில் மழை நீரை சேகரிக்க திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக, 7 போர்வெல்களில், சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தி, குறிப்பிட்ட ஆழத்திற்கு, மணல் கொட்டி, மழை நீர் முறையாக அப்பகுதிக்கு செல்ல கான்கிரீட் தளமும் ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, பயனில்லாமல், காட்சிப்பொருளாக, 95க்கும் அதிகமான போர்வெல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கும், மழை நீர் சேகரிக்க, பணிகளை மேற்கொள்ள, கிராம மக்கள் வலியுறுத்தினர். ஆனால், பணிகள் கண்டுகொள்ளப்படவில்லை.
இதே போல், அரசு கட்டடங்களிலும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் காட்சிப்பொருளாக மாறி விட்டன.
வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பராமரிக்கப்படாமல் இருப்பது அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.