/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராமகோபாலன் பிறந்த நாள் அன்னதானம் வழங்கல்
/
ராமகோபாலன் பிறந்த நாள் அன்னதானம் வழங்கல்
ADDED : செப் 20, 2025 08:03 AM

திருப்பூர்; ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன், 98வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நேற்று திருப்பூரில் நடந்தது. இதையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர், தாராபுரம் ரோடு, சந்திராபுரம் பிரிவில், ஹிந்து முன்னணி சார்பில், ராமகோபாலன் பிறந்த நாள் விழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அவரது படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சண்முகம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பிரதீப் உள்ளிட்ட பல்வேறு நிர்வகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.