/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதுப்பொலிவுடன் திறப்பு விழா
/
ராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதுப்பொலிவுடன் திறப்பு விழா
ராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதுப்பொலிவுடன் திறப்பு விழா
ராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதுப்பொலிவுடன் திறப்பு விழா
ADDED : ஜூலை 16, 2025 11:29 PM

திருப்பூர்; திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே விரிவு படுத்தப்பட்ட ராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதுப்பொலிவுடன் நேற்று திறக்கப்பட்டது.
திருப்பூர், பி.என்., ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நெசவாளர் காலனியில் ராம்ராஜ்காட்டன் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக விரிவுபடுத்தப்பட்டு, புதுப்பொலிவுடன் நேற்று திறக்கப்பட்டது. இதனை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கவுரவத் தலைவர் சக்திவேல் ஷோரூமை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
திருப்பூர் கிட்ஸ் கிளப் கல்விக்குழும தலைவர் மோகன் கார்த்திக், முதல் விற்பனையை பெற்று கொண்டார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் சுமதி நாகராஜன், இணை நிர்வாக இயக்குநர் அஸ்வின், ரம்யம் சேலை பிரிவு இயக்குனர் ஆர்த்திகா, குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமரன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஷோரூம் குறித்துராம்ராஜ் காட்டன் நிர்வாகத்தினர் கூறியதாவது:
தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டு, தமிழகத்தில் அனைத்து முக்கிய நகரங்களில் ஷோரூம் திறக்கப்பட்டு வெற்றி கண்டுள்ளோம்.
பெண்களுக்கு பிரத்யேகமாக காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கான தனி பிரிவுகள் துவங்கியுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களிலும், விமான நிலையங்களிலும் ஷோரூம் திறக்க தயாராகி வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களுக்காக பி.என்., ரோட்டில் உள்ள ஷோரூம் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.