/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்
/
ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்
ADDED : ஜூலை 11, 2025 11:54 PM
உடுமலை; உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது.
பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்ப்பு முகாம், இன்று (12ம் தேதி) காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, உடுமலை தாலுகாவிலுள்ள, தீபாலபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடக்கிறது. மடத்துக்குளம் தாலுகாவிற்கு, குமரலிங்கம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடக்கிறது.
இதில், ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு கோரிக்கை மனு உள்ளிட்ட ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.