/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் குறைகேட்பு முகாம் 2 தாலுகாவில் இன்று நடக்கிறது
/
ரேஷன் குறைகேட்பு முகாம் 2 தாலுகாவில் இன்று நடக்கிறது
ரேஷன் குறைகேட்பு முகாம் 2 தாலுகாவில் இன்று நடக்கிறது
ரேஷன் குறைகேட்பு முகாம் 2 தாலுகாவில் இன்று நடக்கிறது
ADDED : செப் 12, 2025 09:17 PM
உடுமலை, ; உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், ரேஷன் குறைகேட்பு கூட்டம் இன்று நடக்கிறது.
ரேஷன் தொடர்பான பொதுமக்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், குடிமை பொருள் துறை சார்பில், தாலுகா வாரியாக ரேஷன் குறை கேட்பு கூட்டம் நடந்து வருகிறது.
அதன் அடிப்படையில், இன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை , உடுமலை தாலுகாவில், அரசூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில், கொழுமம், நல்லண்ணக்கவுண்டன்புதுார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்திலும் நடக்கிறது. முகாமில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர்.
மேலும், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை குறித்து பதிவு செய்தல் ஆகியன மேற்கொள்ளலாம், என குடிமை பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.