/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோர்ட் வளாகத்தில் சுவர் சேதம் சீரமைக்க வேண்டுகோள்
/
கோர்ட் வளாகத்தில் சுவர் சேதம் சீரமைக்க வேண்டுகோள்
ADDED : செப் 28, 2025 08:07 AM

திருப்பூர் : ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள சுவர்கள் சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமாகிறது. உரிய வகையில் பராமரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன், திருப்பூர் மாவட்ட கோர்ட் அலுவலக மேலாளரிடம் அளித்த மனு: திருப்பூர் மாவட்டஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் கடந்த 2020ம் ஆண்டில், 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த வளாகம் மூன்று தளங்களில் பல்வேறு கோர்ட்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுடன் செயல்படுகிறது. தினமும் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள், போலீசார், வழக்குதாரர்கள் என நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இதில் தரை தளத்தில், ஜே.எம்.எண்:2 கோர்ட் எதிரேயுள்ள சுவர் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. சிறிய அளவிலான பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, அந்த நேரத்தில் அந்த இடத்தில் யாரும் இல்லாத நிலையில் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை
தினமும் பலரும் வந்து செல்லும் இடத்தில் உள்ள கட்டடங்கள் முறையாக பராமரித்து, இங்கு வந்து செல்வோர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.