/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்போர் கவுரவம்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்போர் கவுரவம்
ADDED : அக் 02, 2025 11:38 PM

திருப்பூர்:திருப்பூர், சோளிபாளையம் விரிவு மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாநகராட்சி உறுப்பினர் தங்கராஜ், முனனாள் உறுப்பினர் நடராஜன், சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தை சேர்ந்த பத்மநாபன், சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பு குறித்து, நலச்சங்க தலைவர் குட்டி கிருஷ்ணன், கல்லுாரி மாணவர்கள் பாலகிருஷ்ணன், சுவாதி, திவ்யதர்ஷினி ஆகியோர் பேசினர். துாய்மைப் பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு, இனிப்பு வழங்கப்பட்டு, அவர்களது பணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடையே ஓவியம், கவிதை போட்டி நடத்தப்பட்டு, பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. செல்வம், நன்றி கூறினார்.