/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருவாய்த்துறை ஊழியர் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு
/
வருவாய்த்துறை ஊழியர் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு
ADDED : மார் 19, 2025 11:49 PM

திருப்பூர் : திருப்பூரை சேர்ந்த வருவாய்த்துறை ஊழியர்,' மீண்டும் மஞ்சப்பை' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களுக்கு இலவசமாக பைகளை வழங்கினார்.
திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவறை எழுத்தளராக பணியாற்றி வருபவர் செல்வக்குமார்; இவர், மரக்கன்றுகளை வாங்கி, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி, மக்களிடையே பசுமை வளர்ப்பு குறித்து அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 'டூ வீலர்' ஓட்டுபவர்களிடையே, ெஹல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில், மீண்டும் மஞ்சப்பை' திட்டம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
நேற்று, உடல் முழுவதும் மஞ்சள் பைகளை கட்டிக்கொண்டு, குமரன் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதிகளுக்கு நடந்தே சென்று, பொதுமக்களுக்கு மஞ்சப் பைகளை இலவசமாக வழங்கினார். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், எப்போதும் மஞ்சப்பைகளையே பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தி, மஞ்சப்பையை இலவசமாக வழங்கினார்.
---
அரசு ஊழியர் செல்வக்குமாரின், 'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு பிரசாரம்.