/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் : மாணவர்கள் மீண்டும் வரவழைப்பு பள்ளிக்கு மாணவர்கள் மீண்டும் வரவழைப்பு
/
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் : மாணவர்கள் மீண்டும் வரவழைப்பு பள்ளிக்கு மாணவர்கள் மீண்டும் வரவழைப்பு
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் : மாணவர்கள் மீண்டும் வரவழைப்பு பள்ளிக்கு மாணவர்கள் மீண்டும் வரவழைப்பு
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் : மாணவர்கள் மீண்டும் வரவழைப்பு பள்ளிக்கு மாணவர்கள் மீண்டும் வரவழைப்பு
ADDED : மே 13, 2025 11:42 PM

உடுமலை, ;பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிழையான தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கிய நிலையில், அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து, திருத்தப்பட்ட சான்று வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புக்கு விண்ணப்பிக்க, மேல்நிலைப் பள்ளிகள் தோறும் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், நேற்று முன்தினம், காலை முதலே மாணவர்கள், அவரவர் பயின்ற பள்ளிக்கு நேரடியாகச் சென்றனர். பின்னர், மாற்றுச் சான்று, தற்காலிக மதிப்பெண் சான்று, நன்னடத்தை மற்றும் வருகை சான்று உள்ளிட்டவைகளை தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று வாங்கிச் சென்றனர்.
அதேநேரம், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், 'தமிழ்நாடு மாநில பள்ளித் தேர்வுகள் குழும உறுப்பினர் செயலர் (மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர்)' கையெழுத்து இடம் பெறும் பகுதியில், ஓய்வு பெற்ற உறுப்பினர் செயலர் செல்வக்குமாரின் பெயர் இடம்பெற்றிருந்தது என, தகவல் வெளியானது.
இதையடுத்து, மதியம், 2:00 மணிக்கு மேல், முதன்மை கல்வி அலுவலரை உள்ளடக்கிய 'வாட்ஸ்அப்' குழுவில் செல்வக்குமாருக்கு பதில் ராமசாமி பெயரை பதிவிட்டு திருத்திய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், பல தலைமையாசிரியர்கள், சான்றும் வழங்கும் பணியில் தீவிரம் காட்டியதால், அந்த தகவலை உரிய நேரத்தில் பார்க்கவில்லை. மாணவர்களுக்கு தொடர்ந்து, ஓய்வு பெற்ற உறுப்பினர் செயலர் பெயரை உள்ளிட்டக்கிய சான்றை விநியோகம் செய்தனர்.
அதன்பின்னரே, 'வாட்ஸ்அப்' குழுவில் இடம்பெற்றிருந்த தகவலை பார்த்த தலைமையாசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனால், பிழையான சான்றிதழ்களை, வாங்கிச் சென்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து, திருத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். * பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டன. தொடர்ந்து மாணவர்கள் கல்லுாரிகளில் விண்ணப்பிக்க துவங்கியுள்ளனர்.
மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும், பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மாணவர்களின் பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், தற்போதைய மாற்றுச்சான்றிதழ் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பமிட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.