ADDED : டிச 27, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்குளி ஒன்றியம், செங்கப்பள்ளி ஊராட்சி, நீலாக்கவுண்டம்பாளையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் ரோடு; சென்னிமலைப்பாளையம் ரோடு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் ரோடு; சின்னியம்பாளையம் ஊராட்சி, செம்மாண்டாம்பாளையம் ஏ.டி., காலனியில் 11 லட்சம் ரூபாய் செலவில் வடிகால்; வரக்குட்டை பகுதியில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் ரோடு, 12 லட்சம் மதிப்பில் வடிகால் ஆகிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மொத்தம் 58 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் தலைமை வகித்தார். ஊத்துக்குளி ஒன்றிய குழு தலைவர் பிரேமா, பி.டி.ஓ., சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.