/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
/
குடிநீர் கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 22, 2025 11:15 PM

பல்லடம்; பல்லடத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்லடம் நகராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாகவும், தற்போது, 4 குடம் மட்டுமே தண்ணீர் வந்ததாக கூறிய பொதுமக்கள், குடிநீர் கேட்டு, தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பல்லடம் போலீசார், நகராட்சி அலுவலர்கள் பேச்சு நடத்தினார். அதில், உடன டியாக குடிநீர் வினியோகிக்கப்படும் என்றும், குடிநீர் வினியோகம் சீராக்க நட வடிக்கை மேற்கொள் ளப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், ''கோவையில் இருந்து காரணம்பேட்டை வரை வரும் குடிநீர், அண்ணா நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்வதில்லை, என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
எப்போது கேட்டாலும் குடிநீர் வந்து விடும்என்று மட்டுமே கூறும் அதிகாரிகள், குடிநீர் வினியோகத்தை சீர்படுத்தாமல் உள்ளனர். 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறது.
அதுவும், 4 குடம் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டால் எவ்வாறு சமாளிப்பது என்று தெரிய வில்லை. பல மாதங்களாக இதேநிலை தான் உள்ளது.'' என்றனர்.