/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ரோஸ்லி இன்கார்ப்ரேஷன்' வினியோகஸ்தர்கள் சந்திப்பு
/
'ரோஸ்லி இன்கார்ப்ரேஷன்' வினியோகஸ்தர்கள் சந்திப்பு
ADDED : ஜூலை 22, 2025 11:17 PM
திருப்பூர்; 'ரோஸ்லி இன்கார்ப்ரேஷன்' நிறுவனம், தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள வினியோகஸ்தர்கள் வாயிலாக, விற்பனை நடந்து வருகிறது.
அவ்வகையில், 2வது தென்னிந்திய அளவிலான வினியோகஸ்தர்கள் சந்திப்பு கூட்டம், திருப்பூர், எம்.கே.எம்., ரிச் ஓட்டலில் நேற்று நடந்தது.
'ரோஸ்லி' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:
ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதனை படைத்த ரோஸ்லி நிறுவனம், ஒன்றரை ஆண்டுகளாக, உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. தென்னிந்தியா முழுவதும், ரோஸ்லி உள்ளாடை, நைட்டிகள், குழந்தைகளுக்கான ஆடைகள் விற்பனை நடந்து வருகிறது.
'ரோஸ்லி' நிறுவன விற்பனையில், வினியோகஸ்தர்கள் பங்களிப்பு முக்கிய மானது; தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக, ஓணம், தசரா மற்றும் தீபாவளி பண்டிகை விற்பனையை மேம்படுத்த திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குனர்கள் சந்திரசேகர், பிரபாகரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், குழந்தைகள் ஆடைகளுக்கான,'சேன்-கிட்ஸ்' என்ற பிராண்ட் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.