ADDED : ஆக 13, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொடுவாய் நாச்சிபாளையம் ரோடு முதல் செம்மாண்டக்கவுண்டன்புதுார் வரை, 24.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி நடக்கிறது. 9.91 லட்சம் ரூபாய் மதிப்பில் வேலம்பட்டி ஊராட்சி சாலை மேம்படுத்தும் பணி நடக்கிறது. இதை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் பத்மநாபன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபு, பி.டி.ஓ.,க்கள் சுரேஷ்குமார், விஜயகுமார் உட் பட பலர் பங்கேற்றனர்.

