/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாகனங்கள் செல்ல வழியற்ற சாலைகள்
/
வாகனங்கள் செல்ல வழியற்ற சாலைகள்
ADDED : மார் 18, 2024 12:16 AM

சறுக்கும் சாலை
அவிநாசி - திருப்பூர் ரோடு, திருமுருகன்பூண்டி பாலம் அருகே சாலையில் மணல் நிறைந்துள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.
- விஜி, திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)
வடிகால் இல்லை
திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சி செம்மாண்டம்பாளையத்தில் சாலைகளை விரிவுபடுத்தி, மழைநீர் வடிகால் கட்ட வேண்டும். குறுகிய சாலையால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- யோகேஷ்குமார், செம்மாண்டம்பாளையம். (படம் உண்டு)
பல்லாங்குழி சாலை
திருப்பூர், பலவஞ்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில், வேலவன் பள்ளி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குழியை மூட வேண்டும்.
- ஜெகன், பலவஞ்சிபாளையம். (படம் உண்டு)
குப்பைக்கு தீவைப்பு
திருப்பூர் கணியாம்பூண்டி ஊராட்சி பகுதியில் பொது வெளியில் குப்பை கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுகிறது. புகை வாகன ஓட்டிகள் கண்ணில் நிறைகிறது.
- ரஹூம் அங்குராஜ், கணியாம்பூண்டி. (படம் உண்டு)
வழியும் கழிவுநீர்
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. சாலை சேதமாகும் முன், சரிசெய்ய வேண்டும்.
- ஜீவானந்தம், தென்னம்பாளையம். (படம் உண்டு)
சாலை சேதம்
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, ரயில்வே கேட் ஸ்டாப் அருகே சாலை சேதமாகியுள்ளது. வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.
- பூபதி ராஜா, ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)

