/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோரம் பனியன் கழிவு மூச்சுத்திணறல் அபாயம்
/
ரோட்டோரம் பனியன் கழிவு மூச்சுத்திணறல் அபாயம்
ADDED : ஜூலை 14, 2025 11:52 PM

திருப்பூர்; ஆயத்த ஆடை தொழில் நகரமான திருப்பூரில், ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த ஏராளமான 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள், டன் கணக்கில் பனியன் கழிவுகளை வெளியேற்றுகின்றன.
மாநகராட்சி துாய்மைப் பணியாளர்கள் வாயிலாக அகற்றப்படும் கழிவுகள் ஒருபுறமிருக்க, பல நிறுவனங்கள், வெளியேறும் பனியன் கழிவுகளை, கிராமப்புற சாலையோரம் குவியலாக கொட்டுகின்றனர்.மேலும், நல்லாறு, நொய்யலாற்று படுகைகளிலும் கொட்டுகின்றனர். நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல், இத்தகைய செயலில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
ரோட்டோரம் குவிந்து கிடக்கும் பனியன் கழிவு களில் இருந்து வெளியேறும் மிக அதிகப்படியான துாசு, காற்றில் பறந்து, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் சுவாசத்தில் கலந்து விடுகிறது. இதனால், நுரையீரல் சார்ந்த பிரச்னை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
மருத்துவர்கள் கூறியதாவது:
திருப்பூரில், புற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்படுவோர் தான் அதிகம் என்ற நிலையில் சில ஆண்டுகளாக, நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்டவை புற்றுநோய்க்கு ஒரு காரணமாக உள்ள நிலையில், துாசு மாசு என்பது நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
எனவே, பின்னலாடை தொழில் துறையினர் பனியன் கழிவுகளை சுற்றுப்புறத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.