/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோர வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
/
சாலையோர வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
ADDED : செப் 12, 2025 10:41 PM
திருப்பூர்; தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், திருப்பூர் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்தது.
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பிச்சைமுத்து, தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில துணைத் தலைவர் தெய்வராஜ், மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார். மாநில கன்வீனர் கருப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும், விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து, அடையாள அட்டை வழங்க வேண்டும். 'வெண்டிங் கமிட்டி' தேர்தல் நடத்தாத மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.