/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி வளாகத்தில் பாறை: மாணவருக்கு அச்சுறுத்தல்
/
பள்ளி வளாகத்தில் பாறை: மாணவருக்கு அச்சுறுத்தல்
ADDED : மார் 01, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;பல்லடம், அருள்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தின் பல்வேறு இடங்களில் பாறைகள் உள்ளன. மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், மைதானத்தில் உள்ள பாறைகள் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாய் அமைந்துள்ளன.
பயிற்சிகள் மேற்கொள்ளும் மாணவ மாணவியர், பாறைகளில் தவறி விழுந்து படுகாயம் அடைய வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்கு அச்சுறுத்தலாய் உள்ள பாறைகளை வெட்டி அகற்ற வேண்டும் அல்லது மேல் பரப்பில் கூடுதலாக மண்ணைக் கொட்டி நில மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

