/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பன்னாட்டு ரோட்டரி தலைவர் இன்று திருப்பூருக்கு வருகை
/
பன்னாட்டு ரோட்டரி தலைவர் இன்று திருப்பூருக்கு வருகை
பன்னாட்டு ரோட்டரி தலைவர் இன்று திருப்பூருக்கு வருகை
பன்னாட்டு ரோட்டரி தலைவர் இன்று திருப்பூருக்கு வருகை
ADDED : செப் 21, 2025 06:25 AM
திருப்பூர்: நன்கொடையாளர்களுக்கு நடக்கும் பாராட்டு விழாவில், பங்கேற்க பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் இன்று திருப்பூருக்கு வருகின்றனர்.
இது குறித்து, ரோட்டரி கவர்னர் தனசேகர் கூறியதாவது:
ரோட்டரி மாவட்டம் எண்: 3203ல் இந்தாண்டு சமூக நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காகப் பங்காற்றும் ரோட்டரி உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா, இன்று மாலை, 3:00 மணிக்கு பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில் நடக்கிறது. இதில், பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் ஹோல்கர் நாக், துணைத்தலைவர் பரத் பாண்டியா, இயக்குநர் முருகானந்தம், ரோட்டரி அறக்கட்டளைக்கு, 100 கோடி ரூபாய் நன்கொடையளித்த ரவிசங்கர் டகோஜூ, இதயம் நல்லெண்ணெய் நிர்வாக இயக்குனர் முத்து ஆகியோர் பங்கேற்கின்றனர்.
முன்னதாக உலக அமைதி தினத்தை முன்னிட்டு ரோட்டரி மாவட்டம், 3203ன் சார்பாக அவிநாசி அருகே ரேவதி நர்சிங் கல்லுாரி மைதானத்தில், 4 ஆயிரம் ரோட்ராக்ட் மாணவ, மாணவியர் பங்கேற்று அமைதிப்புறா வடிவத்தில் அணிவகுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.