/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கி முன் ரூ.2 லட்சம் 'அபேஸ்'; பட்டப்பகலில் கும்பல் துணிகரம்
/
வங்கி முன் ரூ.2 லட்சம் 'அபேஸ்'; பட்டப்பகலில் கும்பல் துணிகரம்
வங்கி முன் ரூ.2 லட்சம் 'அபேஸ்'; பட்டப்பகலில் கும்பல் துணிகரம்
வங்கி முன் ரூ.2 லட்சம் 'அபேஸ்'; பட்டப்பகலில் கும்பல் துணிகரம்
ADDED : டிச 25, 2024 04:54 AM
அவிநாசி; அவிநாசியில், வங்கி முன், பட்டப் பகலில் டூவீலரில் இருந்த, 2 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அவிநாசி, சேவூர் ரோடு, காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம், 55, விவசாயி. நேற்று காலை, அவிநாசியிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் தனது கணக்கில் இருந்து, 2.10 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். அதில், 10 ஆயிரம் ரூபாயை சட்டைப் பாக்கெட்டில் வைத்து, மீதமிருந்த, 2 லட்சம் ரூபாயை தனது டூ வீலர் (ஸ்கூட்டர்) சீட்டுக்கு அடியில், வைத்துள்ளார்.
அருகிலுள்ள நண்பரின் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது, தனது டூவீலரின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணம் திருடப்பட்டது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த சண்முகம், போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வங்கிக் கிளையில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை பார்த்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் நடந்து வந்தும் மற்றும் இரண்டு டூவீலர்களில் வந்த நான்கு பேர் என மொத்தம் ஆறு பேர் கொண்ட கும்பல் சண்முகத்தின் ஸ்கூட்டர் சீட்டை உடைத்து அதிலிருந்து ஒருவர் பணத்தை திருடி செல்வது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, பணத்தை திருடி சென்ற கும்பலை, குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

