/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிரைவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; நிதி நிறுவனத்தினருக்கு உத்தரவு
/
டிரைவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; நிதி நிறுவனத்தினருக்கு உத்தரவு
டிரைவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; நிதி நிறுவனத்தினருக்கு உத்தரவு
டிரைவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; நிதி நிறுவனத்தினருக்கு உத்தரவு
ADDED : ஆக 20, 2025 11:27 PM
திருப்பூர்; பெருந்தொழுவு, ராக்கியாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 50; லாரி டிரைவர். கடந்த, 2023 ஜூலை 12ல், 2.65 லட்சம் ரூபாய் செலுத்தி, லாரி வாங்கினார்.
மீதி தொகை, 19 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய்க்கு கோவை, காந்திபுரத்தில் உள்ள எச்.டி.பி., பைனான்சியல் சர்வீசஸ் என்ற நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினார். இதற்காக, மாதம், 45 ஆயிரத்து, 750 ரூபாய் வீதம், 60 மாத தவணை செலுத்த அறிவுறுத்தப்பட்டது. 14 மாத தவணை செலுத்திய நிலையில், சக்திவேலால் மேற்கொண்டு தவணையை செலுத்த முடியவில்லை.
லாரியை நல்ல விலைக்கு விற்பனை செய்து கொடுப்பதாக நிதி நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சக்திவேலும் லாரியை நிதி நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.ஆனால் அந்த லாரியை குறைந்த விலைக்குத்தான் விற்பனை செய்ய முடிந்ததால், சக்திவேல் மேலும், 10 லட்சத்து 30 ஆயிரத்து 777 ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும் என்று நிதி நிறுவனம் தெரிவித்தது.
அதிர்ச்சியடைந்த சக்திவேல், திருப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கோர்ட்டில், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த கோர்ட் தலைவர் தீபா, உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர், சக்திவேலுவுக்கு, நிதி நிறுவனம், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு; வழக்கு செலவுக்காக, 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இவ்வழக்கில் சக்தி வேல் தரப்பில் வக்கீல் பிரான்சிஸ் அலெக்சாண்டர் ஆஜரானார்.

