/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் சார்ந்த உட்கட்டமைப்பு அமைக்க ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு
/
வேளாண் சார்ந்த உட்கட்டமைப்பு அமைக்க ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண் சார்ந்த உட்கட்டமைப்பு அமைக்க ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண் சார்ந்த உட்கட்டமைப்பு அமைக்க ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : அக் 10, 2025 10:35 PM
உடுமலை; விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த உட்கட்டமைப்புகள் அமைக்க, ரூ. 86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை சார்ந்த, உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, மத்திய அரசு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பிணையற்ற, குறைந்த வட்டியிலான கடன் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்திற்கு, நடப்பு ஆண்டில் ரூ. 86 கோடி கடன் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.
விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தேவையான மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைப்பொருட்களை மதிப்பு கூட்டுவதற்கான அமைப்புகள் ,தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர் பதன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து வாகனங்கள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் ஆகிய கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு, இத்திட்டத்தின்கீழ் கடன் உதவி வங்கி வாயிலாக வழங்கப்பட்டு, அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு எழு ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு, 3 சதவீதம் வட்டி குறைப்பு வழங்கப்படுகிறது.
இத்திட்டதின்கீழ் பயன் பெற, https://agriinfradac.gov.in என்ற முகவரியில், விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு ddab.tiruppur@gmail.com என்ற இ- மெயில் அல்லது வேளாண்மை துணை இயக்குநர். (வேளாண் வணிகம்), திருப்பூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.