/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காற்றில் ஊசலாடும் ஆளும் கட்சி பேனர்
/
காற்றில் ஊசலாடும் ஆளும் கட்சி பேனர்
ADDED : செப் 29, 2025 12:19 AM

திருப்பூர்; திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் (தி.மு.க.) கடந்த வாரம் பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். குமரன் ரோடு டவுன் ஹால் பகுதியில் அமைந்துள்ள நடை மேம்பாலம் மீது பேனர் கட்டியிருந்தனர். இந்த பேனர் காற்றின் வேகம் தாக்குப் பிடிக்க முடியாமல் பாதியில் கிழிந்து தொங்கிக் கொண்டுள்ளது.
பரபரப்பான வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த பகுதியில் கிழிந்து காற்றில் ஊசலாடும் பேனரின் ஒரு பகுதி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பேனர் அமைத்த கட்சியினர், விளம்பர டெண்டர் எடுத்த டெண்டர்தாரர், போலீசார் என யாரும் இது குறித்து கண்டு கொள்ளவில்லை