/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 26, 2025 06:32 AM
திருப்பூர்; தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 1500 க்கும் மேற்பட்ட, ஊராட்சி செயலாளர் பணியிடங்கள், வாகன ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டு விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்கவேண்டும். ஏழு ஆண்டுகள் பணி முடிந்த பணி மேற்பார்வையாளர் அனைவரையும், இளநிலை பொறியாளர் நிலைக்கு உயர்த்த வேண்டும். பள்ளிகளில், காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.
மாநிலம் முழுவதும் ஒரே சீராக, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பிரிவில், தலைமை கணக்கர் பணியிடத்தை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு நிரப்பவேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.