/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெருக்கடியில் தவிக்கும் கூட்டுறவு வங்கி; வேதனையில் கிராம பெண்கள்
/
நெருக்கடியில் தவிக்கும் கூட்டுறவு வங்கி; வேதனையில் கிராம பெண்கள்
நெருக்கடியில் தவிக்கும் கூட்டுறவு வங்கி; வேதனையில் கிராம பெண்கள்
நெருக்கடியில் தவிக்கும் கூட்டுறவு வங்கி; வேதனையில் கிராம பெண்கள்
ADDED : ஜன 03, 2026 06:01 AM
உடுமலை: உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெறப்படும் பயிர்க்கடன் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாகவே பணம் வழங்கப்படுகிறது.
இதே போல், கிராமங்களிலுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் தொழில் கடன் பரிவர்த்தனைகள், நகைக்கடன் வழங்குதல் என கிராம விவசாயிகள் மற்றும் இதர தரப்பினர் அதிகளவு இந்த வங்கியை பயன்படுத்தி வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த வங்கி, இடநெருக்கடியான கட்டடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதி இல்லாததால், வங்கிக்குள், 10 பேருக்கு மேல் நிற்கவோ, அமரவோ முடிவதில்லை.
இதனால், மக்கள், வங்கியின் வெளியே படிக்கட்டுகளில் அமர்ந்து காத்திருக்க வேண்டியுள்ளது. உள்ளே நிலவும் இடநெருக்கடியால், மக்கள், அலுவலர்கள் என இருதரப்பினரும் பாதித்து வருகின்றனர்.
மேலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மகளிர் சுய உதவிக்குழுக்களின் தொழில் கடன் மற்றும் நகைக்கடன் பரிவர்த்தனைகள் செய்ய நீண்ட நேரமாகிறது.
பெரும்பாலான நாட்களில், 5 நபர்களுக்கு மட்டுமே, நகைக்கடன் சார்ந்த பரிவர்த்தனைகள் வழங்கப்படுகிறது. இதனால், பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
சில நாட்களில், அலுவலர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் வாக்குவாதமும் ஏற்படுகிறது. தேர்தல் நெருங்குவதால், புதிதாக நகை அடமான கடன் பெற அதிகளவு பெண்கள், மத்திய கூட்டுறவு வங்கிக்கு வருகின்றனர்.
இதனால், வழக்கத்தை விட கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, பெதப்பம்பட்டி மத்திய கூட்டுறவு வங்கி கிளையை இடவசதியுள்ள கட்டடத்துக்கு மாற்ற வேண்டும்.
தேவையான கம்ப்யூட்டர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்துவது அவசியமாகியுள்ளது.

