ADDED : பிப் 04, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட திராவிட ஜின்னிங் டையிங் மற்றும் ஸ்கிரின் பிரின்டிங் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் அவை தலைவர் சேகர் தலைமையில் நடந்தது.
பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். சாயப்பட்டறைகளில் பணிபுரியும் மாஸ்டர், சாப்ட்புளோ, பைலர் மேன், உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பணியாற்றும் தொழிலாளருக்கு, இன்றைய சூழலுக்கு ஏற்ப, 30 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும்; பிரின்டிங்கில் வேலை செய்யும் மாஸ்டர், பிரின்டர், உதவியாளர்களுக்கும் சம்பளம் உயர்த்த வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினசரி, 900 ரூபாய் சம்பளம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் முத்து, பிரதீப் குமார், முருகசாமி, சின்னசாமி, முருகன், ரகுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

