/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அத்துமீறினால் தைரியமாக சொல்லுங்கள்'
/
'அத்துமீறினால் தைரியமாக சொல்லுங்கள்'
ADDED : பிப் 21, 2025 12:13 AM

திருப்பூர்; மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு போக்சோ மற்றும் சைபர் கிரைம் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், அனுப்பர்பாளையம் புதுார், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று இந்நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் வரவேற்றார்.
வக்கீல் வெங்கடேஷ் பேசுகையில்,'சிறுவர்கள் பேட் டச் மற்றும் குட் டச் என்றால் என்னவென்று முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். உங்களிடம் யாரேனும் அத்துமீறினால், பெற்றோர், நம்பிக்கையான நபர்கள், ஆசிரியர்களிடம் தைரியமாக தெரிவிக்க வேண்டும். இது போல் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும். சட்டப்பணிகள் ஆலோசனைக்குழு 15100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இது போன்ற பிரச்னைகள் குறித்தும் தகவல் அளிக்கலாம்' என்றார்.
''மொபைல் போன் மோகத்தால், இன்றைய சிறுவர்கள் தங்கள் படிப்பை, நிம்மதியை, சேமிப்பை தொலைத்து விடுகின்றனர். சைபர் கிரைம் மோசடியில் சிக்கி விடக் கூடாது'' என்று வக்கீல் பூர்ணபிரியா பேசினார். மரியாலயா காப்பக இயக்குநர் அருள்மேரி, பெண் குழந்தைகள் உடல் நலம்; கல்வியின் அவசியம் குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து குழந்தை திருமண ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடந்தது. முடிவில் பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகர் நன்றி கூறினார்.

