ADDED : செப் 14, 2025 10:56 PM
உடுமலை; உடுமலை மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை அருகே மலையாண்டிபட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பயோஸ்டாட் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிறுவன நிர்வாகத்தினர் முன்னிலை வகித்தனர். பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா, 2,500 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து தனியார் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் பேசினர். பள்ளி தலைமையாசிரியர் சதீஷ்குமார், ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களும், மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.