/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்; கட்டாய கல்வி விழிப்புணர்வு
/
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்; கட்டாய கல்வி விழிப்புணர்வு
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்; கட்டாய கல்வி விழிப்புணர்வு
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்; கட்டாய கல்வி விழிப்புணர்வு
ADDED : ஜூலை 25, 2025 08:52 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. இதில், அடிப்படை கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், இணை செயல்பாடுகள், மாணவர்களின் தனித்திறன்கள் குறித்து பெற்றோருக்கு தெரிவிப்பதற்கு, தொடர்ந்து பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்குழுவில், மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில், பள்ளிகளில் உள்ள வசதிகள், அரசின் நலத்திட்டங்கள், மாணவர்களுக்கான உதவித்தொகை பெறுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் நடந்தது. இதில் பெற்றோர் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், கூட்டத்தில், அடிப்படை கட்டாய கல்வி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.