/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் சோதனையில் சிக்கிய பள்ளி பணம்
/
தேர்தல் சோதனையில் சிக்கிய பள்ளி பணம்
ADDED : மார் 20, 2024 02:24 AM
திருப்பூர்:வாக்காளர்களுக்கு
பட்டுவாடா செய்வதற்காக, அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில்
பணம், பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்ல வாய்ப்பு உள்ளது.
அத்தகைய
முறைகேடுகளை தடுப்பதற்காக, பறக்கும்படை, நிலை
கண்காணிப்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு, இரவு பகலாக தீவிர வாகன
சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் வடக்கு சட்டசபை
தொகுதிக்கு உட்பட்ட, திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு,
கவுண்டம்பாளையம் நால் ரோடு பகுதியில் நேற்று காலை, பிரம்மநாயகம்
தலைமையிலான பறக்கும்படை குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.
ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில்,
விஜயமங்கலத்திலுள்ள பொறியியல் கல்லுாரிக்கு காரில் பணம் எடுத்துச்
செல்லப்பட்டது. உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட, 2 லட்சத்து 10
ஆயிரத்து, 310 ரூபாயை கைப்பற்றிய பறக்கும்படை குழுவினர், வடக்கு
தாசில்தார் மகேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.
ரூ.3.06 லட்சம் பறிமுதல்
திருப்பூர்
தெற்கு தொகுதியில், இருவேறு நபர்களிடம் இருந்து, மூன்று லட்சத்து, 81
ஆயிரத்து, 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தெற்கு தொகுதியின்
நிலை கண்காணிப்பு குழு, நேற்று முன்தினம் காங்கயம் ரோட்டில் வாகன
தணிக்கை மேற்கொண்டிருந்தது.
நாச்சிபாளையம் அருகே, உரிய
ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட, மூன்று லட்சத்து, 6 ஆயிரத்து, 500
மற்றும் 74 ஆயிரத்து, 600 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது..

