/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறப்பு
/
விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறப்பு
ADDED : ஜன 02, 2025 06:16 AM

திருப்பூர்; கடந்த மாதம், அரையாண்டு தேர்வு நடந்தது. அதனை தொடர்ந்து, டிச., 24 முதல் ஜன., 1 வரை ஒன்பது நாள் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது.
நேற்றுடன் விடுமுறை முடிந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்காக பள்ளி வளாகம், மைதானம், குடிநீர் தொட்டிகள் துாய்மைப்படுத்தும் பணி இரண்டு நாட்களாக நடந்தது. இன்று இறைவணக்க கூட்டம் முடிந்த பின் வகுப்பறைக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில் உள்ள துவக்க, நடுநிலை பள்ளி மாணவருக்கு தேவையான 5.30 லட்சம் புத்தகங்கள், நோட்டுக்கள் அனைவருக்கும் வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கல்வியாண்டு நிறைவுக்கு, மூன்று மாதம் மட்டுமே இருப்பதால், மாணவ, மாணவியர் இனி தேவையற்ற விடுப்பை தவிர்த்து, பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். தேர்ச்சிக்கு வருகைப்பதிவு கட்டாயம் என்பதை பெற்றோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்,' என்றனர்.

