/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி விளையாட்டு விழா; மாணவர்கள் அணிவகுப்பு
/
பள்ளி விளையாட்டு விழா; மாணவர்கள் அணிவகுப்பு
ADDED : பிப் 03, 2025 11:23 PM

உடுமலை; உடுமலை, ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் மாலா, விழாவை துவக்கி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆசிரியர்கள் சசிகலாபானு, ஷியாமளா விளையாட்டு விழாவிற்கான ஒலிம்பிக்கொடி மற்றும் பள்ளிக்கொடி ஏற்றினர்.
மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்கள் ஒலிம்பிக் தீபம் ஏந்தி வந்தனர். மாணவர்களுக்கு, 100, 200 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கோகோ, தடை தாண்டுதல், போட்டிகள் நடந்தன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. உடுமலை, ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

