ADDED : நவ 05, 2025 12:22 AM

பல்லடம்: பல்லடத்தை அடுத்த, அருள்புரம் பகுதியில், ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி ஒன்றின் மீது, வேன் மோதியது. இந்த விபத்தில், டிரைவர் சிவசாமி 65 என்பவரின் கால் முறிவு ஏற்பட்டதுடன், வயிற்றிலும் பலத்த காயமும் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த வேன் டிரைவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில், 'உரிமம் புதுப்பிப்பது தொடர்பாக, திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பள்ளி வேன் திடீரென ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. வேனுக்குள் குழந்தைகள் யாருமில்லை.
படுகாயமடைந்த வேன் டிரைவர், மயக்கமடைந்த நிலையில், சிகிச்சையில் உள்ளார்,' என்றனர்.

