/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளிகள்!
/
மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளிகள்!
மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளிகள்!
மாநில கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளிகள்!
ADDED : நவ 23, 2024 05:39 AM

திருப்பூர் : விரைவில் நடக்கவுள்ள மாநில கலைத்திருவிழாவுக்கு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளிக்கான பிரிவில், 56 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த, 15 மற்றும், 18ம் தேதி, மாவட்ட கலைத்திருவிழா நடந்தது. மாவட்டம் முழுதும் இருந்து குறுவட்டார அளவில் வெற்றி பெற்ற, 1,560 மாணவ, மாணவியர், பள்ளி அணிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இவர்களில் முதலிடம் பெற்றவர்கள், விரைவில் நடக்கவுள்ள மாநில கலைத்திருவிழாவுக்கு தேர்வாகியுள்ளனர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், தனிநபர் பிரிவில், 16, குழு பிரிவில், 40, என, 56 பேர் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
மாநில கலைத்திருவிழாவில், பங்கேற்கும் மாணவ, மாணவியர் விவரம்:
6 - 8 ம் வகுப்பு பிரிவு
(அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வாரியாக)
பரதநாட்டியம்:
அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளி மாணவியர் ஹனுஷியாஸ்ரீ, ஹரினா, பிரியதர்ஷனி, பிரதிக் ஷா, பிரகதி, தானுஸ்ரீ, சாருஹாசினி, காவ்யா.பள்ளபாளையம் செயின்ட் ஜோசப் நடுநிலைப்பள்ளி மாணவியர் பிரியதர்ஷனா, ஐஸ்வர்யா, கயல்வழி, தன்யாஸ்ரீ, சுவேதா.
களிமண் சுதை வேலைப்பாடு:
நிஷாந்த் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாணிக்காபுரம்), அனுஸ்ரீ (பி.எம்.சி.டி.வி., அரசு மேல்நிலைப்பள்ளி, தாயம்பாளையம்)கிராமிய நடனம் குழு:
திருப்பூர், பூலுவப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவியர் மோனிகா, நேத்ரா, பவன்யா, அணிலேகஸ்ரீ, தனுஷ்காஸ்ரீ, சுவேதா, தனியாஸ்ரீ, நனீதா, அக் ஷயா
கிழக்கு பல்லடம் டி.இ.எல்.சி., பள்ளி மாணவியர் தேஜூ, இசக்கி சுகுமாறன், ஜாய்சிரீனா, வசந்தி, சரண்அரவிந்த், மோனிகா, ஜஸ்டின் ஜனரியோ, கனிஷ்கா
மணல் சிற்பம்:
ரித்திஷ்குமார் (மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நல்லுார்)
அபிநந்து (செயின்ட் ஜோசப் பள்ளி, பள்ளபாளையம்)
பலகுரல் பேச்சு:
சாம்கண்ணன் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வீரணாம்பாளையம்)
ஹாசினி (ஜி.கே.என்., அரசு மேல்நிலைப்பள்ளி, புங்கமுத்துார்)
நகைச்சுவை வழங்குதல்:
மதிவதனா (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோட்டமங்கலம்)
பிரனீத் (டி.இ.எல்.சி., பள்ளி, கிழக்கு பல்லடம்)
நாட்டுப்புற பாடல்:
தனிப்பாட்டு அனுகீர்த்தனா (ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி)
ரிதன்யா (எம்.எஸ்.என்., அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிந்தாபுரம்)
ஓவியம் வரைதல்:
லக் ஷிதாஸ்ரீ (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அல்லாளபுரம்)
வைஷ்ணவி (கார்மல் பள்ளி, காங்கயம்)
செவ்வியல் இசை:
தனிப்பாட்டு, சுவிதா (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அம்மாபாளையம்)
ஆதிரா (செயின்ட் ஆலோசியஸ் பெண்கள் பள்ளி, தாராபுரம்)
தனி நபர் நடிப்பு:
சுஹாசினி (அரசு உயர்நிலைப்பள்ளி, என்.சி.ஜி., வலசு)
பூஜா (செயின்ட் அலோசியஸ் பெண்கள் பள்ளி, தாராபுரம்)
வில்லுப்பாட்டு:
ஸ்ருதி, ேஹமா, கண்மணி, கலைச்செல்வி, சமீரா, (அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி)
ரிதன்யா, சண்முகபிரியா, கலைவாணி, நித்ரா சஹானா, யாழினி (எம்.எஸ்.என்., அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிந்தாபுரம்)