/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிற்பக்கலை கற்றல் மையமானது பூண்டி
/
சிற்பக்கலை கற்றல் மையமானது பூண்டி
ADDED : டிச 08, 2025 05:28 AM

திருப்பூர்: கோவை பாரதியார் பல்கலை முதுகலை வரலாற்று துறையில் படிக்கும், 25 மாணவர்கள், உள்ளக பயிற்சியின் ஒரு பகுதியாக, திருமுருகன்பூண்டி, அனுப்பர்பாளையம் பகுதியின் பிரதான தொழிலாக உள்ள சிற்பம் மற்றும் உலோக கலை குறித்து அறிந்துகொண்டனர்.
சிற்ப கலையின் நுணுக்கம் குறித்து, ஸ்தபதி கனகரத்தினம், மாணவர்களுக்கு விளக்கினார். 'கல் சிற்பம் தயாரிக்க பயன்படும் மூலக்கற்கள், ஊத்துக்குளி பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது; தெய்வ சிலைகள், மனித உருவங்கள் என, ஒவ்வொரு தேவைக்கேற்ப, கற்களை தேர்ந்தெடுப்போம்' என்றார்.
கற்களை செதுக்கி, சிலையாக வடிக்கும் வகையிலான விஷயங்கள், தொழில்நுட்ப பயன்பாடு குறித்தும் விளக்கினார்.
உலோக சிற்பக்கலை வல்லுனர் ஆனந்தன், உலோக கலவையில் தாதுப் பொருட்களின் கலவை, உருக்குதல், வார்த்தல், அச்சு எடுத்தல், சாத்துதல் மற்றும் கவசமாக மாற்றுதல் குறித்த விஷயங்களை பகிர்ந்தார். உலோகங்களை உருக்கும் உலைகள், துருத்தி எனப்படும் பண்டைய தொழில்நுட்பம், கோவில் கோபுர கலசங்கள் செய்யப்படும் தொழிற்சாலை, கோவில் கொடிமர உலோக காப்பு தயாரிக்கும் இடங்களிலும் மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
பாரதியார் பல்கலை வரலாற்றுத்துறை தலைவர் உதயசந்திரன், இளங்கோவன், நிகழ்வை ஒருங்கிணைத்தனர். யாக்கை மரபு அறக்கட்டளையின் சுதாகர் நல்லியப்பன், குமரவேல் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
த: ன: ித்துவம்: கொங்கு நாட்டு பகுதியில் சிற்பம், உலோக கலை வளர்ச்சியில், திருமுருகன்பூண்டி தனி சிறப்பிடம் பெற்ற பகுதி. இங்கு, இடைக்கால வரலாற்று காலம் தொட்டே கலைகளின் செயல்பாடுகள் குறித்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இங்கு கற்சிற்பம், செம்பு, வெண்கலம், பித்தளை, வெள்ளி உலோகங்களின் சிற்பங்கள் தனித்துவமானவை.
- குமரவேல் ராமசாமி: யாக்கை மரபுஅறக்கட்டளை.:

