/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இணைய சிக்கலால் வினாடி -- வினா தாமதம்
/
இணைய சிக்கலால் வினாடி -- வினா தாமதம்
ADDED : மார் 15, 2024 08:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;அரசுப்பள்ளிகளில், இணைய சிக்கலால் வினாடி-வினா போட்டி நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பீடு செய்வதற்கு திறன் மேம்பாட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும், 5 மதிப்பெண் என மொத்தமாக, 25 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும். நடப்பாண்டுக்கான தேர்வு மார்ச் 12 முதல் 20ம் தேதி வரை நடக்கிறது.
உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில் இணையதள பிரச்னை ஏற்படுவதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்பகுதிகளில் தேர்வுக்கான 'ஆன்லைன்' இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வும் தாமதமாகிறது.

