/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தன்னம்பிக்கை - விடாமுயற்சி சாதிப்பவர்களுக்கு உறுதுணை'
/
'தன்னம்பிக்கை - விடாமுயற்சி சாதிப்பவர்களுக்கு உறுதுணை'
'தன்னம்பிக்கை - விடாமுயற்சி சாதிப்பவர்களுக்கு உறுதுணை'
'தன்னம்பிக்கை - விடாமுயற்சி சாதிப்பவர்களுக்கு உறுதுணை'
ADDED : டிச 22, 2025 05:02 AM

பல்லடம்: பல்லடம், -மங்கலம் ரோட்டில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, சினேகா சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், மாற்றுத்திறனாளிகள் நல ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. சினேகா பள்ளியின் இயக்குனர் கவிதா வரவேற்றார்.
நிர்வாகிகள் ரோஷி, சாந்தி மற்றும் திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிறுவனர் லீலாஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் அனுஷ்கா பேசுகையில், ''விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால், எதையும் சாதிக்க முடியும். மாற்றுத்திறனாளிகளாலும் சாதிக்க முடியும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன,'' என்றார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.