/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மளிகை கடையில் மது விற்பனை 'கம்பி நீட்டிய' குடும்பத்துக்கு 'வலை'
/
மளிகை கடையில் மது விற்பனை 'கம்பி நீட்டிய' குடும்பத்துக்கு 'வலை'
மளிகை கடையில் மது விற்பனை 'கம்பி நீட்டிய' குடும்பத்துக்கு 'வலை'
மளிகை கடையில் மது விற்பனை 'கம்பி நீட்டிய' குடும்பத்துக்கு 'வலை'
ADDED : செப் 29, 2024 02:17 AM

பல்லடம்: பல்லடம் அருகே மளிகை கடையில் குட்கா, மது விற்றவர்களை போலீசார் தேடி வருகின்றர்.
தென்காசியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் 75. இவரது மகன்கள் பாக்கியராஜ் 40, பெரியசாமி 38, பெரியராஜ் 36, திருமலைராஜ் 35 மற்றும் பாக்கியநாதன், 30. பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
இதே பகுதியில், இரண்டு மளிகை கடை மற்றும் ஒரு மீன் கடை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். இந்த மளிகை கடைகளில், விதிமுறை மீறி குட்கா மற்றும் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தவுடன், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள இதர மளிகை கடைகளுக்கும் சப்ளை செய்து வந்துள்ளனர்.
அவரப்பாளையம், அல்லாளபுரம், குப்புச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சில மளிகை கடைகளில், பல்லடம் போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, ஆனந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் சப்ளை செய்து வருவதாக, மளிகை கடையினர் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், கணபதி பாளையம் பகுதியில் உள்ள ஆனந்தராஜ் குடும்பத்தினருக்கு சொந்தமான மளிகை கடைகளில், போலீசார் ஆய்வு செய்ததில், 200 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மறுநாள் விசாரணைக்கு ஆஜராவதாக கூறிய ஆனந்தராஜ் குடும்பத்தினர், தலைமறைவாகி விட்டனர். பாக்யராஜை மட்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமுறைவான ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.